மூன்று மாடி வீட்டிற்குள் நுழைந்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. தப்பியோடிய ஆபத்தான நபர்
பாணந்துறை, நல்லுருவ பகுதியில் 'டிஜே சது' (DJ Chathu) என்ற பெருமளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரால் வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்த ஆடம்பர மூன்று மாடி வீடொன்றை நேற்றைய தினம் (25) பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர் போதைப்பொருட்களை பொதி செய்து விநியோகிக்கும் பணிகளிலும், போதைப்பொருள் பொதிகளுக்கான லோகோக்களை (logos) அச்சிடும் பணிகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்தச் சோதனையின் போது, மொத்தமாக ஹெரோயின் விநியோகம் செய்வதற்காக மாதிரிப் பொதிகளாகத் தயாரிக்கப்பட்ட ஐந்து சிறிய பொதிகள், அச்சிடப்பட்ட பொதி செய்யும் பொருட்கள், பொதிகளை அச்சிடப் பயன்படுத்தப்படும் விசேட காகிதங்கள் மற்றும் காகிதம் வெட்டும் இயந்திரம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
போதைப்பொருள் கடத்தல்..
அத்துடன், அந்த வீட்டின் பாதுகாப்பு கெமரா அமைப்பின் மெமரி கார்டுகள், மூன்று கைபேசிகள் மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட ஆபரணங்கள் சிலவற்றையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

குறித்த வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்த போதிலும், எப்போதும் பூட்டப்பட்ட நிலையில் சந்தேகத்திற்கிடமாக காணப்படுவதாக பாணந்துறை பிரிவுக்குட்பட்ட குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
அதனடிப்படையில், நடத்தப்பட்ட விசாரணையில், வெளிநாட்டிலிருந்து இயங்கும் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான 'பாணந்துறை குடு சலிந்து' என்பவரின் போதைப்பொருள் வலையமைப்பைச் சேர்ந்த 'ரண்டிக' என்பவரின் பிரதான கூட்டாளியான 'டிஜே சது' என்பவரே, மாதம் 70,000 ரூபா வாடகைக்கு தனது காதலியுடன் இந்த வீட்டில் வசித்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் விபரங்களை அறிக்கை செய்து, சோதனை பிடியாணை பெறப்பட்ட பின்னரே இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மகிந்த ஆட்சியில் நடந்த கொடூரம் - ஜனாதிபதி தேர்தலில் பாரிய மோசடி - நள்ளிரவில் சிறை பிடிக்கப்பட்ட ஆணையாளர்
தப்பியோட்டம்..
சோதனையின் போது, வீட்டின் ஒரு அறையில் பெரிய திரைகள் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப சாதனங்கள் பொருத்தப்பட்டு, வெளிநாட்டில் உள்ளவர்களுடன் நேரடியாக தொடர்புகொள்ளும் வகையில் வசதிகள் செய்யப்பட்டிருந்ததை பொலிஸார் அவதானித்துள்ளனர்.

மேலும், இந்த மூன்று மாடி வீட்டின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் பல இடங்களில் CCTV கெமராக்கள் பொருத்தப்பட்டு, கைபேசிகள் மூலமாக தொலைவிலிருந்து கண்காணிக்கும் வகையில் அவை வடிவமைக்கப்பட்டிருந்ததையும் புலனாய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்க நிற ஆபரணங்கள் பரிசோதிக்கப்பட்டதில் அவை அசல் தங்கம் அல்ல என்பது தெரியவந்துள்ளது.
இருப்பினும், சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்வதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பாணந்துறை பிரிவுக்குட்பட்ட குற்றப் புலனாய்வுப் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri