தாஜுதீன் படுகொலைக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் தொடர்பில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்
றகர் வீரர் வசீம் தாஜுதீன் படுகொலை தொடர்பான விசாரணைகளின் போது கண்டறியப்பட்ட, படுகொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 3 வாகனங்கள் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த வாகனங்கள் மேலும் பல குற்றச் செயல்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளமைக்கான தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி செயலகம் ஊடாக ஷிரந்தி ராஜபக்ச மற்றும் யோசித ராஜபக்ச ஆகியோரின் பாதுகாப்பிற்காக இந்த 3 கெப் வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளன.
தாஜுதீன் படுகொலை
WP PD 79--, WP PD 80--, WP GB 05-- இலக்கங்களைக் கொண்ட இந்த 3 கெப் வாகனங்களும் வசீம் தாஜுதீன் படுகொலை சம்பவத்துடன் நேரடியாக தொடர்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய 3 வாகனங்களுக்கும் உரிய இயக்கப் பதிவேடுகள் இல்லாமை, மற்றும் இயக்கப் பதிவேடுகள் முறையற்றவையாக இருத்தல் உள்ளிட்ட பல பிரச்சினைகளும் காணப்பட்டன.
இந்த வாகனங்கள் தொடர்பான விசாரணைகளின் போது, அவைகள் வேறு குற்றச் செயல்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பல தரப்பினரால் அவை பயன்பாட்டில் இருந்தமையும் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், வசிம் தாஜுதீன் கொல்லப்பட்ட 2012ஆம் ஆண்டு மே 16 ஆம் திகதி இரவில் ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைந்த WP LV 05--, WP PD 13--, WP KA 98--, WP KD 01--, WP PA 72-- ஆகிய இலக்கங்களைக் கொண்ட வாகனங்கள் தொடர்பிலும் விசாரணைப் பிரிவினர் விரிவான தகவல்களைக் கண்டறிந்துள்ளனர்.
அத்துடன், இந்த வாகனங்களின் இயக்கப் பதிவேடுகளிலும் பாரிய பிரச்சினைகள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan