காருக்குள் கஞ்சாவை வைக்க முயன்ற பொலிஸ் அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை
கொழும்பு(Colombo) - கொள்ளுப்பிட்டியில் வாகனத்தை சோதனை செய்யும் போது சூட்சமமான முறையில் காருக்குள் கஞ்சாவை வைத்து இளைஞர்களை கைது செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவரே பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பணி இடை நீக்கம்
கொள்ளுப்பிட்டி பகுதியில் இளைஞர்கள் குழுவொன்று காரில் பயணித்துக் கொண்டிருந்த போது, பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று காரை நிறுத்தி சோதனையிட்டுள்ளதுடன், கான்ஸ்டபிள் ஒருவர் காரில் கஞ்சாவை வைத்து இளைஞர்களை கைது செய்ய முட்பட்டுள்ளார்.
இந்நிலையில், குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர், கொழும்பு தெற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரவீந்திர அம்பேபிட்டியவின் உத்தரவுக்கமைய குறித்த கான்ஸ்டபிள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |