ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்! விஜயதாசவுக்கே ஆதரவு என்று மைத்திரிபால பகிரங்கம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கே தான் ஆதரவு வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களிடம் கருத்துரைக்கும் போதே மைத்திரிபால இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கோ அல்லது ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கோ நான் ஆதரவு வழங்கமாட்டேன்.
ரணிலும், சஜித்தும் சுயநலவாதிகள், இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கே தான் ஆதரவு வழங்குவேன்.
விஜயதாச ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்தான். அவருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நான் நிராகரிக்கின்றேன்.
அத்துடன், அவர் நாட்டுக்காகத் துணிந்து செயற்படும் அரசியல்வாதி" என மைத்திரிபால தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

தமிழகத்தில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள அஜித்தின் குட் பேட் அக்லி.. எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam

சவால்விடும் சூழ்நிலைகளையும் கூலாக கையாளும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

அடேங்கப்பா முதல் நாளில் உலகம் முழுவதும் மாஸ் வசூல் வேட்டை செய்த அஜித்தின் குட் பேட் அக்லி... Cineulagam
