பாகிஸ்தானில் முஸ்லிம்கள் கூடும் மண்டபத்தில் குண்டுவெடிப்பு: 15 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஷியா சமூகத்தினர் கூடும் மண்டபத்தில் பயங்கர குண்டுவெடிப்பு சற்றுமுன் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்தின் ஷேசாத் பகுதியில் உள்ள இமாம்பர்காஹ் என்ற ஷியா சமூகத்தினர் கூடும் மண்டபத்தில் இன்று(06.02.2026) மக்கள் அதிகம் கூடியிருந்த சமயத்திலேயே இவ்வாறு நிகழ்ந்துள்ளது.
உயிரிழப்பு
அதில், குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது
மேலும் 80 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குண்டுவெடிப்பின் தாக்கத்தால் மண்டப கட்டிடத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதுடன், அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறதாகவும் கூறப்படுகிறது.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, இஸ்லாமாபாத் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குண்டுவெடிப்பு தொடர்பில் இதுவரை எந்த அமைப்பும் இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பிரிவினைவாதிகள் பயங்கரவாத தாக்குதல்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் நிலையில், தற்போது பாகிஸ்தான் தலைநகரிலேயே குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 3 நாட்கள் முன்
திடீரென பற்றியெரிந்த ஈரான் தலைநகர் - அமெரிக்காவை அச்சுறுத்தும் ஈரானின் ஸ்லீப்பர் செல்ஸ் News Lankasri
சீதாவை அடித்த அருண், மீனா செய்த காரியம், ஆதாரம் திரட்டிய ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam