ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் நாமல்: பெரமுன கட்சி உறுப்பினர் தகவல்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவது தொடர்பில் கட்சி இன்னும் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்று அக்கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினரான காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல்
அவர் மேலும் கூறியதாவது,"ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இன்னும் முடிவெடுக்கவில்லை.

அதேபோல் நாமல் ராஜபக்சவை வேட்பாளராக போட்டியிட வைப்பது பற்றியும் தீர்மானம் எடுக்கப்படவில்லை. எனினும், நாமல் ராஜபக்சவின் பங்களிப்புடன் கட்சியைக் கட்டியெழுப்பும் பணி இடம்பெறுகின்றது.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சி மட்டத்தில் கலந்துரையாடல் இடம்பெற்று
வருகின்றது. எனவே, உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும்.
அதேவேளை, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின்போது அவரைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri