கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முக்கிய அறிவித்தல்
கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு 12 மணிநேரம் நீர் விநியோக தடை நடைமுறைபடுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இந்த நீர்விநியோகத் தடையானது நாளை ( 04) காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையான 12 மணித்தியால காலப்பகுதியில் நடைமுறையாகும் என சபை குறிப்பிட்டுள்ளது.
மின்சார விநியோக கட்டமைப்பின் திருத்த பணிகள்
மின்சார விநியோகக் கட்டமைப்பின் முல்லேரியா உப மின்நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள், தெஹிவளை நீர் உந்து நிலையம் மற்றும் மாளிகாவத்தை லைட்ஹவுஸ் நீர் உந்து நிலையம் ஆகியவற்றின் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதன்படி, கொழும்பு 01 முதல் 15 வரையான அனைத்துப் பகுதிகளில் இந்த நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
அத்துடன் ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே, பத்தரமுல்ல, பெலவத்தை, ஹோகந்தர, கொஸ்வத்தை, தலவத்துகொட ராஜகிரிய, மிரிஹான, மாதிவெல, நுகேகொட, நாவல,கொலன்னாவ, ஐனுர், கொட்டிகாவத்தை, அங்கொட, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்தை,கடுவெல, மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் பிலியந்தலை ஆகிய இடங்களில் நீர் விநியோகத்தடை நடைமுறையாகவுள்ளது.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan