இலட்சக்கணக்கானோரின் வங்கிக்கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ள பணம் - வெளியான அறிவிப்பு
ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரிக்கொடுப்பனவுகள் எதிர்வரும் 19ஆம் திகதி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
அதன்படி, அஸ்வெசும நல உதவித் திட்டத்தின் முதல் கட்டப் பயனாளிக் குடும்பங்களுக்கு 9,241,892,500 ரூபாய் வழங்கப்படவுள்ளது.
வைப்பிலிடப்படவுள்ள பணம்
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டத்தின்கீழ் 999,502 பயனாளி குடும்பங்களுக்கு 9 பில்லியன் 241 மில்லியன் 892 ஆயிரத்து 500 ரூபாய் தொகை வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது.

இதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் 212,955 பயனாளி குடும்பங்களுக்கு 2 பில்லியன் 321 மில்லியன் 735 ஆயிரம் ரூபாய் தொகையை வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கமைய தகுதியான பயனாளிகள் தங்களது வங்கிக் கணக்குகள் ஊடாக குறித்த கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இலங்கையில் முதன்முறையாக பதிவாகியுள்ள சம்பவம்! பிரபல தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள் அதிரடியாக கைது