நீதிமன்ற வளாகத்தில் தாக்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரி - நியாயமான விசாரணை கோரும் ஊடகவியலாளர்கள் சங்கம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கும் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் ஒருவருக்கும் இடையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில், உடனடியாகப் பாரபட்சமற்றதும் நியாயமானதுமான விசாரணையொன்றை நடத்துமாறு இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் ரங்க பண்டாரநாயக்க மற்றும் பொதுச் செயலாளர் மிதுன் ஜயவர்தன ஆகியோர் இணைந்து இன்று(01.10.2026) விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணையின் பின்னர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்திலிருந்து வெளியேறிய சந்தர்ப்பத்தில் நுழைவாயிலுக்கு அருகில் நேற்று(30) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கேமராவால் தலையில் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் பாதுகாப்பு அதிகாரி, காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற சம்பவம்
பொதுமக்களுக்குத் தகவல்களை அறிக்கையிடுவதற்கான ஊடகவியலாளர்களின் உரிமையும், கடமையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு அதிகாரிகளின் பாதுகாப்பும் எந்த விதத்திலேயும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பாதுகாப்பு அதிகாரியின் உத்தியோகபூர்வ கடமைக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதா அல்லது ஊடகவியலாளரின் சுதந்திரமான ஊடகப் பயன்பாட்டுக்குத் தடையேற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் உடனடியாகவும், பாரபட்சமற்ற முறையிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
நீதிமன்ற வளாகத்துக்குள் இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவம் இரு தரப்பினரின் பாதுகாப்புத் தொடர்பிலும் காணப்படும் பாதுகாப்பின்மையை வெளிப்படுத்துகின்றது என்றும், எந்தவொரு தரப்பையும் முன்கூட்டியே குற்றவாளியாகக் கருதாமல் உண்மையான நிலைமையை வெளிக்கொணர வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சிறுத்தை படத்தில் கார்த்தியின் மகளாக நடித்த குழந்தையா இவர்... ஆளே மாறிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோஸ் Cineulagam