நீதிமன்றில் வணங்கி மன்னிப்புக் கோரிய துணைப் பொலிஸ் பரிசோதகர்
இலங்கை துணைப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு எதிராக, திறந்த நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, மூன்று பேரிடம் மன்னிப்புக் கோரியுள்ளதாக கூறப்படுகிறது.
2021ஆம் ஆண்டு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றுக்குள் அனுமதியின்றி நுழைந்து அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பிலேயே இந்த மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.
கொள்ளுப்பெட்டி பொலிஸுடன் இணைந்த குறித்த துணை பரிசோதகர், தனியார் நிறுவனத்தில் உள்ளக ஒழுக்காற்று விசாரணையின்போது , சாதாரண உடையில் ஆயுதம் ஏந்தியபடி, பல பலவந்தமாக நிறுவனத்திற்குள் நுழைந்துள்ளார்.
மனுதாரர்களிடம் மன்னிப்பு
இதன்போது ஒழுக்காற்று விசாரணை நடவடிக்கைகளுக்காக அங்கு பிரசன்னமாகியிருந்த சட்டத்தரணி ஒருவர் உட்பட, நிறுவனத்தின் மனித வளத் திணைக்களத்தைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகளுக்கு அவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் துணை பரிசோதகர் முதலாவது பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்தார்
இந்தநிலையில் இன்று தமது தவறை ஏற்றுக்கொண்டு அவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுதாரர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.
மேலும், சிங்களப் பாரம்பரியத்தின்படி கைகளைக் குவித்து வணங்கி அவர் நீதிமன்றில் மன்னிப்புக் கோரியுள்ளார்.
 
    
    சாந்தன் தொடர்பில் 22ஆம் திகதி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு : தமிழக அரசு காட்டிய தாமதம்! அம்பலமாகும் உண்மைகள்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
    
    மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
 
    
    ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
 
    
    பிக்பாஸ் 9 சீசன் Wild Cardல் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபல சன் டிவி நடிகை... யாரு தெரியுமா? Cineulagam
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        