சேவையில் இல்லாத விமானங்களுக்கு 565 கோடி ரூபாவை வாடகையாக செலுத்திய ஸ்ரீலங்கன்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 08 விமானங்கள் சேவையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்ட போதிலும் பெருந்தொகை பணத்தை செலுத்தியுள்ளது.
அந்த விமானங்களுக்கான வாடகையாக 5,646.76 மில்லியன் ரூபாவை விமான நிறுவனம் செலுத்தியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தனது விமான நடவடிக்கைகளுக்கு 27 விமானங்களின் தேவையுடன் உள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்
தற்போது நிறுவனத்திடம் 24 விமானங்கள் மட்டுமே உள்ளன. அறிக்கைக்கமைய, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தற்போது 18 விமானங்களை செயற்பாட்டிற்குப் பயன்படுத்துகிறது.
மேலும் நிறுவனம் வைத்திருந்த 24 விமானங்களில் 08 விமானங்கள் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் திகதிக்குள் சேவையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது.
2021 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் திகதி வரை பயன்பாட்டிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்ட இந்த விமானங்களுக்கான வாடகைத் தொகையாக 5,646.76 மில்லியன் ரூபாவை விமான நிறுவனம் செலுத்தியுள்ளது.