சாந்தன் தொடர்பில் 22ஆம் திகதி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு : தமிழக அரசு காட்டிய தாமதம்! அம்பலமாகும் உண்மைகள்

Government of Tamil Nadu India Sri Lanka Government
By Benat Mar 02, 2024 06:27 AM GMT
Report

சாந்தன் 28ஆம் திகதி காலையில் இயற்கை எய்தினார். அவருடைய மரணமானது, அவருக்கு கல்லீரலில் ஏற்பட்ட செயலிழப்பினால் நிகழ்ந்துள்ளது. அதில் எவ்விதமான சந்தேகங்களும் இல்லை. ஆனால் அவர் இலங்கைக்கு செல்வது தாமதமாகியமைக்கு  இந்திய மத்திய அரசும், தமிழக அரசினதும் செயற்பாடுகளே காரணம் என்று சாந்தனின் சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார்.

சாந்தன் இலங்கை திரும்புவதில் ஏற்பட்ட தாமதங்கள் தொடர்பில் பத்திரிகை ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இரண்டு பெண் குழுக்களுக்கு இடையில் கடும் மோதல் : ஆபத்தான நிலையில் பெண்

இரண்டு பெண் குழுக்களுக்கு இடையில் கடும் மோதல் : ஆபத்தான நிலையில் பெண்

கடந்த 22ஆம் திகதி திருச்சி மாவட்ட ஆட்சியாளருக்கு மத்திய அரசாங்கம் சாந்தனை நாடு கடத்துவதற்கான உத்தரவினை அனுப்பியிருந்தபோதும் அவர் கடந்த 27ஆம் திகதி வரையில் வெளிப்படுத்தாது வைத்திருந்தார் என்றும் அவர் கூறினார்.

இலங்கை அரசின் அனுமதி

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை வழங்கப்பாட்டிருந்த சாந்தனுக்கு பின்னர் மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவரது தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. அதன்பின்னர் அவர் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் திகதி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைவாக விடுவிக்கப்பட்டார்.

சாந்தன் தொடர்பில் 22ஆம் திகதி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு : தமிழக அரசு காட்டிய தாமதம்! அம்பலமாகும் உண்மைகள் | Santhan Dies In Chennai Hospital

எனினும், அவர் 2022 டிசம்பர் 12ஆம் திகதி திருச்சி திறந்த வெளிச்சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். அவர் அங்கே தங்கவைக்கப்பட்டிருந்தாலும் அவரை இலங்கைக்கு அனுப்புவதற்கு மத்திய அரசாங்கம் எவ்விதமான சமிக்ஞைகளையும் காண்பிக்கவில்லை.

இந்த நிலையில், 2023ஆம் ஆண்டு மத்திய, மாநில அரசாங்கங்களுக்கு அவர் பல கடிதங்களைத் தொடர்ச்சியாக அனுப்பியபோதும் முறையான பதிலளிப்புக்கள் காணப்பட்டிருக்கவில்லை.

இதனால் அவர் ரிட் வழக்கொன்றை சென்னை உயர்நீதிமன்றில் மேற்கொண்டிருந்தார். இதன்போது, மத்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத் தரப்பிலிருந்து எவ்விதமான அனுமதிகளும் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது. எனினும், பின்னர் இலங்கை அரசாங்கத்துடன் நடைபெற்ற உரையாடல்களை அடுத்து அவருக்கு இலங்கை செல்வதற்கான கடவுச்சீட்டு வழங்கப்பட்டது.

எனினும் தமிழக அரசாங்கத் தரப்பில் தொடர்ச்சியாக அவரை நாடுகடத்துவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும், அந்த உத்தரவும் இந்திய மத்திய மாநில அரசுகளால் பின்பற்றப்படவில்லை.

தமிழக அரசே காரணம்

குறிப்பாக, சாந்தனை நாடுகடத்துமாறு நீதிபதி உத்தரவினை பிறப்பித்துள்ளபோதும், அதனை தமிழக அரசு நடைமுறைப்படுத்தவில்லை.

சாந்தன் தொடர்பில் 22ஆம் திகதி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு : தமிழக அரசு காட்டிய தாமதம்! அம்பலமாகும் உண்மைகள் | Santhan Dies In Chennai Hospital

இந்த நிலையில் அவர், கடந்த ஜனவரி மாதம் திருச்சி வைத்தியசாலையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து அவர் மேலதிக சிகிச்சைகளுக்காகச் சென்னையில் உள்ள ரஜீவ் காந்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார், அவர் அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தருணத்திலும் மீண்டும் நீதிபதியின் உத்தரவு நடைமுறை சம்பந்தமாக நாம் கவனத்துக்கு கொண்டு சென்றபோது சாந்தனை உடனடியாக நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகளைத் தாமதமின்றி முன்னெடுக்குமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

எனினும், அச்செயற்பாடு தொடர்பில் எந்தவிதமான நடவடிக்கைகளையும் தமிழக அரசு முன்னெடுக்கவில்லை. அதேநேரம் கடந்த 22ஆம் திகதி திருச்சி மாவட்ட ஆட்சியாளருக்கு மத்திய அரசாங்கம் சாந்தனை நாடு கடத்துவதற்கான உத்தரவினை அனுப்பியிருந்தபோதும் அவர் கடந்த 27ஆம் திகதி வரையில் வெளிப்படுத்தாது வைத்திருந்தார்.

தகவலறிந்து நாம் அவரைத்தொடர்பு கொண்டபோது தான் அவர் அவ்வாறு மத்திய அரசாங்கத்தின் உத்தரவு கிடைத்ததை உறுதி செய்தார்.

எனினும், சாந்தன் 28ஆம் திகதி காலையில் இயற்கை எய்தினார். அவருடைய மரணமானது, அவருக்கு கல்லீரலில் ஏற்பட்ட செயலிழப்பினால் நிகழ்ந்துள்ளது.

அதில் எவ்விதமான சந்தேகங்களும் இல்லை. ஆனால் அவர் இலங்கைக்கு செல்வது தாமதமாகியமைக்கு காரணம் இந்திய மத்திய அரசும், தமிழக அரசினதும் செயற்பாடுகளே  என குறிப்பிட்டுள்ளார்.

திருமணம் முடிந்து வீடு திரும்பிய புதுமண தம்பதியினருக்கு நேர்ந்த விபரீதம்

திருமணம் முடிந்து வீடு திரும்பிய புதுமண தம்பதியினருக்கு நேர்ந்த விபரீதம்

முன்னணி நிறுவன உரிமையாளரின் மகளை கொடூரமாக தாக்கிய அரசியல்வாதியின் மகன்

முன்னணி நிறுவன உரிமையாளரின் மகளை கொடூரமாக தாக்கிய அரசியல்வாதியின் மகன்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US