ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரொருவர் கைது
ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் பிரதி மேயர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹம்பாந்தோட்டை பகுதியில் வீதி சோதனையில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் காரை நிறுத்தி, சோதனை மேற்கொண்டுள்ளனர்.
நீதிமன்றத்தில் முன்னிலை
இதன்போது சாரதி குடிபோதையில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் அவர் ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் பிரதி மேயர் என்பதும் தெரியவந்துள்ளது.
இவர், ஹம்பாந்தோட்டை மாநகர சபையில் அதிகாரம் கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் என்பதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சந்தேகநபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், 9ஆம் திகதி ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளார்.
YOU MAY LIKE THIS VIDEO