இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் - பிரதமர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
பிரதமர் ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) பணியாளர் மட்ட ஒப்பந்தத்தை எட்டுவதற்கும் பிணை எடுப்புப் பொதிக்கான வேலைத்திட்டத்தை இறுதி செய்வதற்கும் எதிர்பார்த்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில், பிரதமர் இன்று வருகை தந்த சர்வதேச நாணய நிதியத்தின் குழுவை சந்தித்ததாக கூறினார்.
Today, I met the visiting IMF Team and commenced discussions. Looking forward to reaching a staff level agreement and finalizing the program soon.
— Ranil Wickremesinghe (@RW_UNP) June 20, 2022
சர்வதேச நாணய நிதியத்தின் பத்து பேர் கொண்ட குழுவொன்று இன்று இலங்கை வந்துள்ளதுடன், கொழும்பில் உள்ள பிரதமருடன் அவரது அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தியது.
இக்கலந்துரையாடலில் நிதியமைச்சின் செயலாளர், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் ஏனைய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இலங்கையின் பிணையெடுப்பு கோரிக்கை தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான முதலாவது நேரில் பேச்சுவார்த்தை திங்கட்கிழமை கொழும்பில் ஆரம்பமாகி 10 நாட்களுக்கு தொடரும் என கடன் வழங்குனரும் அரசாங்கமும் சுருக்கமான அறிக்கைகளில் தெரிவித்துள்ளன.
இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் குழு
1948ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கை மிக மோசமான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், பிணை எடுப்புத் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காக சர்வதேச நாணய நிதியத்தின் குழு இலங்கை வந்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் குழு, ஜூன் 30 வரை கொழும்பில் தங்கியுள்ளது. இலங்கையின் மீட்புத் திட்டம் என்ன என்பது பற்றிய சமீபத்திய பேச்சுவார்த்தைகளைத் தொடரவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் நேற்றைய தினம் அறிவித்திருந்தது.
சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு இணங்க, இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான எமது உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம் என உலகளாவிய கடன் வழங்குனர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தில் யாரும் மத்தியஸ்தம் செய்ய தேவை இல்லை - டிரம்ப் கோரிக்கையை நிராகரித்த மோடி News Lankasri

இனியா செய்த விஷயம்.. ஷாக் ஆன வில்லன்! நம்பர் 1 ட்ரெண்டிங்கில் பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ Cineulagam
