தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து இராணுவத்தை காப்பாற்ற உதவிகோரிய அரச தலைவர்: பாட்டலி வெளிப்படுத்திய இரகசியம்
முன்னாள் ஜனாதிபதி ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து இலங்கை இராணுவத்தை யாழ்ப்பாணத்திலிருந்து காப்பாற்றி கொண்டு வருவதற்கு இந்தியாவிடம் கப்பல் தருமாறு கேட்டிருந்தார் என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவிததுள்ளார்.
ஒரு காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அப்படியொரு சக்தி வாய்ந்தவர்களாக இருந்தனர் என்றும் குறிப்பிட்டார்.
இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே இதனை தெரிவித்திருந்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
சந்திரிகாவின் வியூகங்கள்
இலங்கை முழுவதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கான சந்தர்ப்பம் அன்று காணப்பட்டது.ஆனால் இன்று சிலர் அதை மறுந்து விட்டனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் ஆனையிறவை கைப்பற்றி கொழும்பில் குண்டுகளை வெடிக்க வைத்து கொண்டு இலங்கை முழுவதையும் கைப்பற்றும் இறுதி கட்டம் வரை வந்தனர்.
2000 ஆம் ஆண்டு சர்வதேச ஊடகங்கள் இலங்கைக்கு வந்தது.ஏனென்றால் புதிய நூற்றாண்டின் ஆரம்பத்தில் மலரும் புதிய தேசம் அதாவது தமிழீழம் தொடர்பான செய்திகளை சேகரிப்பதற்காக.
அவ்வாறான நிலையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இலங்கை இராணுவத்தை யாழ்ப்பாணத்திலிருந்து காப்பாற்றி கொண்டு வருவதற்கு இந்தியாவிடம் கப்பல் கேட்டிருந்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவரை அரசியல் ரீதியில் தோற்கடிக்க சந்திரிகா பல வியூகங்களை வகுத்தார்.
அரசியல் பரவலாக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அதிகாரத்தை வழங்கி சர்வதேச ரீதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவரை முடக்குவதற்கான திட்டத்தை சந்திரிகா முன்னெடுத்தார்.
ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தொடரான யுத்த வெற்றியில் அவை தோற்கடிக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.