வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள வளிமண்டல குழப்பம் - வானிலையில் மாற்றம்
நாட்டிற்கு தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள வளிமண்டல கீழ்த்தளத் தளம்பல் நிலை மேலும் வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கை இன்று (05) பிற்பகல் 3.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது.
வளிமண்டல தளம்பல் நிலை
நாட்டிற்கு தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள வளிமண்டல கீழ்த்தளத் தளம்பல் நிலை மேலும் வலுவடைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக, ஜனவரி 8 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் நாட்டின் குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் தொடர்புடைய அறிக்கை குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.