உலக சந்தையில் வரலாறு காணாத உயர்வை எட்டிய தங்க விலை! இலங்கையிலும் திடீர் மாற்றம்
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா சிறைப்பிடித்ததை தொடர்ந்து தங்கம், வெள்ளி மற்றும் உலோகங்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இன்று (05) காலை உலக சந்தைகளில் ஒரு அவுன்ஸ் தங்கம் சுமார் 1.8 சதவீதம் அதிகரித்து $4,408 (£3,282) ஆக உயர்ந்துள்ளதுடன், வெள்ளி விலையும் 3.5% உயர்ந்துள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் 2025 இல் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச அளவை எட்டியதாக கூறப்படுகிறது.

முதலாம் இணைப்பு
உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, இலங்கையிலும் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,
கடந்த 02ஆம் திகதி 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 356,000 ரூபாவாக இருந்த நிலையில் இன்று (05) 3,000 ரூபாய் அதிகரித்துள்ளது.
இலங்கையில் தங்கத்தின் விலை
அந்த வகையில் 24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை 360,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
அதற்கமைய, 22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை 332,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை 314,900 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
தள்ளிப்போன ஜனநாயகன்.. 'இது அதிகார துஷ்பிரயோகம்': விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள் Cineulagam
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri