ட்ரம்பை கொல்ல சதி திட்டம் தீட்டிய ஈரான் உளவாளி கைது

Donald Trump Iran World
By K. S. Raj Aug 07, 2024 06:42 PM GMT
Report

பாகிஸ்தானை சேர்ந்த ஈரான் உளவாளி ஆசிப் மெர்ச்சன்ட் (வயது 46) என்பவரை அமெரிக்க உளவுத்துறையினர் சமீபத்தில் கைது செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்பட பல முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை கொல்ல சதித்திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது.

வெளிநாடொன்றில் திடீரென விபத்துக்குள்ளான உலங்கு வானூர்தி : 5 பேர் பலி

வெளிநாடொன்றில் திடீரென விபத்துக்குள்ளான உலங்கு வானூர்தி : 5 பேர் பலி

அரசியல் பேரணி

பாகிஸ்தானில் இருந்து அமெரிக்கா புறப்படுவதற்கு முன்பு ஆசிப் மெர்ச்சன்ட் ஈரான் சென்று வந்ததாகவும், அமெரிக்காவில் அரசியல் கொலைகளை செய்வதற்காக சதித்திட்டத்துடன் அவர் ஈரானில் இருந்து வந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் தனது சதித்திட்டத்தை நிறைவேற்ற சிலரை அணுகியுள்ளார். ஆனால் அந்த நபர்கள் பொலிஸ் அதிகாரிகள் ஆவார்கள்.

ட்ரம்பை கொல்ல சதி திட்டம் தீட்டிய ஈரான் உளவாளி கைது | Plot To Kill Trump Iran Spy Arrested

கூலிப்படை போல் நடித்த அதிகாரிகளிடம் ஆசிப் மெர்ச்சன்ட் தனது திட்டத்தை தெரிவித்துள்ளார்.

ஆவணங்களைத் திருடுதல், அரசியல் பேரணிகளில் போராட்டங்களை ஏற்பாடு செய்தல், ஒரு அரசியல் நபரை கொல்வது ஆகிய மூன்று திட்டங்களை அவர் தெரிவித்துள்ளார். மேலும் முன்பணமாக 5 ஆயிரம் அமெரிக்க டொலர்களை கொடுத்துள்ளார்.

ரணிலை பதவி நீக்குவதில் சஜித் - நாமல் இரகசிய நகர்வு

ரணிலை பதவி நீக்குவதில் சஜித் - நாமல் இரகசிய நகர்வு

முக்கிய ஆதாரங்கள்

அதன்பின்னர் அமெரிக்காவில் இருந்து புறப்பட முயன்றபோது ஆசிப் மெர்ச்சன்ட்டை கைது செய்தனர். இதுதொடர்பாக பொலிஸார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் டொனால்ட் ட்ரம்பை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார் என்று நேரடியாக தெரிவிக்கப்படவில்லை.

ஆனால் சில முக்கிய ஆதாரங்களின்படி ட்ரம்பை கொலை செய்யும் திட்டமும் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

ட்ரம்பை கொல்ல சதி திட்டம் தீட்டிய ஈரான் உளவாளி கைது | Plot To Kill Trump Iran Spy Arrested

ஈரான் இராணுவ தளபதி காசிம் சுலைமானி ஈராக் சென்றபோது அவரை அமெரிக்கா கொலை செய்தது. இதற்கு பதிலடியாக முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பை பழி வாங்குவோம் என்று ஈரான் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் ஈரான் உளவாளி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாடொன்றில் திடீரென விபத்துக்குள்ளான உலங்கு வானூர்தி : 5 பேர் பலி

வெளிநாடொன்றில் திடீரென விபத்துக்குள்ளான உலங்கு வானூர்தி : 5 பேர் பலி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US