பிள்ளையானின் நெருங்கிய சகாக்கள் தலைமறைவு! சிறைக்குள் ஆபத்தா
மட்டக்களப்பு - காந்தி பூங்காவில் இன்றையதினம்(17.4.2026) தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையானை சாதாரண சிறைக்கு மாற்றுமாறு கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பிள்ளையானுக்கு ஆதரவாக இடம்பெற்ற போராட்டத்தில் அவருக்கு நெருங்கிய பல ஆதரவாளர்கள் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக அதனுடைய பொதுச்செயலாளர், மற்றும் பிரதித் தலைவர் எனப் பலரும் அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதனை அவதானிக்க முடிந்தது.
மாறாக அந்தப் போராட்டத்திலே பிள்ளையானின் உறவினர்கள், மற்றும் அவரின் உடன்பிறப்புக்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்தனர்.
ஏன் பிள்ளையானுக்கு ஆதரவான இந்தப் போராட்டத்தில் பல முக்கியஸ்தர்கள் தலைமறைவாகியமை இங்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
அதுமட்டுமன்றி அவரது பல முக்கியஸ்தர்கள் மீது வழக்குகளும், பொலிஸ் முறைப்பாடுகளும் நிலுவையில் உள்ளதனால் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வது என்பது சிக்கலை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகின்றது.
பிள்ளையானின் நெருங்கிய சகாக்கள் ஏன் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,