ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் குறித்து திருப்தி - கத்தோலிக்க திருச்சபை
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட்ட வருவதாக கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தங்களுக்கு தெரிந்த வகையில் இந்த விசாரணைகள் சரியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விசாரணைகள் தொடர்பில் சிலர் பதற்றமடைந்துள்ளதும் தெரிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு சிலர் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படும் விதம் தொடர்பில் பீதி அடைந்துள்ளதனை அவதானிக்க முடிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணைகளின் மூலம் வெளிப்படும் சில தகவல்களின் அடிப்படையில் சிலர் பதற்றம் அடைவதை அவதானிக்க முடிவதாக தெரிவித்துள்ளார்.
பதற்றமடைந்த நபர்கள் யார் என்பதை அவதானித்தால் அவர்கள் ஏன் பதற்றம் அடைகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணைகள் நடத்தப்படும் போது யாரும் பதற்றம் அடைய வேண்டிய அவசியம் இல்லை அது சட்ட ரீதியான ஒரு நடவடிக்கையாகும் என தெரிவித்துள்ளார்.
விசாரணைகள் முன்னெடுக்கப்படும்போது பதற்றம் அடைய வேண்டியவர்கள் அதனுடன் தொடர்புடையவர்கள் அல்லது குற்றவாளிகளை பாதுகாக்க முனைவோர்கள் என சுட்டிக்காட்டி உள்ளார்.
ஒரு கொலை இடம்பெற்றது என்றால் அது தொடர்பில் புத்தகம் எழுதுவதில் பயனில்லை எனவும் அவ்வாறு புத்தகம் எழுதுவதில் எவ்வித பயனும் கிடையாது என தெரிவித்துள்ளார்.
கொலையுடன் தொடர்புடையவர்களை விசாரணை நடத்தி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணகைள் சரியான முறையில் நடப்பதாக நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.