அமைச்சர் லால் காந்தவிற்கு எதிராக முறைப்பாடு!
விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்தவின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் குறித்து விசாரணை நடத்துமாறு கோரி இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று அளிக்கப்பட்டுள்ளது.
வைத்திய மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்திய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர், வைத்தியர் சமல் சஞ்சீவவினால் இன்று (17.4.2026) இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாடு
அமைச்சர் கே.டி. லால் காந்த 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளுக்கு அமைவாக கடந்த ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி சமர்ப்பித்த சொத்து விபர அறிக்கை தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

தனக்கு 6.7 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய அசையா சொத்துக்கள் உள்ளதாக அமைச்சர் தனது சொத்து விபர அறிக்கையில் குறிப்பிட்டுள்ளமையும், ஆனால் சில வருடங்களுக்கு முன்னர் தனது செலவுகளைக் கூட ஈடுகட்டுவது கடினம் என அவர் தெரிவித்திருந்த கருத்தையும் கருத்திற் கொண்டு இந்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினமும் அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடும்..! 17 மணி நேரம் முன்
ஜெயிலர் 2 ரிலீஸ் தள்ளிப்போகிறதா? சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அறிவிப்பு.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி Cineulagam
குழந்தைக்கு ஒரு வயது கூட ஆகல... பிக் பாஸ் சீசன் 10-ல் ஜாய் கிரிஸில்டா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள் Manithan