யாழ். தாவடியில் பெட்ரோல் குண்டு தாக்குதல்: ஒருதலை காதலால் விபரீதம் (Photos)
யாழ்ப்பாணம் - தாவடி வன்னிய சிங்கம் வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதுடன் வீட்டு உடமைகளும் சேதமாக்கப்பட்டுள்ளது.
இன்று (16.09.2023) அதிகாலை இடம்பெற்ற தாக்குதலில், ஐந்து பேர் காயம் அடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெட்ரோல் குண்டு தாக்குதல்
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், உடும்பிராய் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட வீட்டில் உள்ள யுவதியை காதலித்ததாகவும் பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்குமாறு கூறிய போது பெற்றோர் மறுத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த இளைஞன் தனது குழுவினருடன் வந்து இன்று அதிகாலை வீட்டினை தாக்கி சேதப்படுத்தி வீட்டில் பெட்ரோல் குண்டு தாக்குதலையும் மேற்கொண்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
அடேங்கப்பா நம்ம முத்துவா இது, ஆளே மாறிட்டாரே, என்ன செய்துள்ளார் பாருங்க... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கும் நடிகை ஸ்ரீஜா தனது கணவருடன் எடுத்த அழகிய போட்டோஸ் Cineulagam
பலமுறை ஏமாற்றப்பட்டேன், கடவுள் நீதி வழங்குவார் - கிரிக்கெட் வீரரின் வருங்கால மனைவி பதிவு News Lankasri
நான் குட்டை உடை அணிந்த புகைப்படம் வெளியானதும் அவ்ளோ பிரச்சனை... சீரியல் நடிகை பரீனா ஆசாத் Cineulagam