யாழில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்
யாழில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்து பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், ஆவரங்கால் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு எதிராக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைக்கு வருமாறு சந்தேகநபருக்கு பொலிஸார் அழைப்பு விடுத்த போதிலும் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக நேற்றைய தினம் (14.09.2023) சந்தேகநபரை கைது செய்வதற்காக பருத்தித்துறை பொலிஸார், சந்தேகநபரின் வீட்டுக்கு சென்றபோது அவர் பொலிஸாருடன் முரண்பட்டு பொலிஸாரை தாக்கியுள்ளார்.

அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல்
அதனையடுத்து அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் அச்சுவேலி மேலதிக பொலிஸார் அங்கு விரைந்து சந்தேகநபரை செய்து பருத்தித்துறை பொலிஸ்
நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் அச்சுவேலி மற்றும் பருத்தித்துறை பொலிஸார்
விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 17 மணி நேரம் முன்
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan