யாழில் வாள்வெட்டு தாக்குதல்: ஒருவர் படுகாயம்
யாழ்ப்பாணம் - நாயன்மார்கட்டு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றைய தினம் (09.14.2023) இடம்பெற்றுள்ளது.
மோட்டார் வாகனமொன்றில் வந்தவர்களே இவ்வாறு தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், தாக்குதலுக்கு இலக்கான நபர் பல குற்றங்களுடன் தொடர்புடையவர் என்றும் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் விசாரணை
இந்நிலையில், வாள்வெட்டில் காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இடம்பெற்ற போது தாக்குதலுக்கு இலக்கானவருடன் பொலிஸ் உயர் அதிகாரிக்கு கீழ் கடமையாற்றும் பொலிஸ் புலனாய்வைச் சேர்ந்த அதிகாரி ஒருவரும் உடனிருந்ததாக கூறப்படுகின்றது.
மேலும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam