தமிழ்மக்களுக்கு அரசியல் தீர்வு: பிரித்தானிய பிரதமரிடம் மனு கையளிப்பு
பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் ஒன்றிணைந்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை வலியுறுத்தி பிரித்தானிய பிரதமருக்குகான மனு ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்காலில் படுகொலைசெய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் 16ஆவது ஆண்டு நிறைவு நாளான நேற்று(18) நினைவு நிகழ்வு நடத்தப்பட்டு குறித்த மனு வழங்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் டவுனிங் வீதியில் உள்ள பிரித்தானியா நாடாளுமன்றத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 16ஆம் ஆண்டு நினைவு நிகழ்வும் நினைவுகூரப்பட்டுள்ளது.
தீப வணக்கம்
பிரித்தானியா நாடாளுமன்றத்திற்கு முன்பாக ஒன்று கூடிய ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர் யுவதிகள் நாடாளுமன்றத்திற்கு முன்பாக கனயீர்ப்பினை வெளிப்படுத்தி பேரணியாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிற்கு முன்பாக வரை சென்றடைந்தனர்.

அதன் பின்னர், அங்கு நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் பொதுச்சுடரினை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் கலை பண்பாட்டுக் கழக செயற்பாட்டாளர் அனுரா ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து, அங்கு அமைக்கப்பெற்ற நினைவுத்தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலர்தூவி தீப வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
வரலாறு காணாத ஒரு பொதுக்கூட்டம்.. சீமான் தலைமையில் இடம்பெற்ற மே 18 தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை News Lankasri