யாழில் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த நபர் கைது
கிளிநொச்சி (Kilinochchi) பொலிஸாரால் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (07) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வீட்டிற்கு தீவைப்பு
சந்தேகநபர், கடந்த 2022 ஓகஸ்ட் 30ஆம் திகதி அன்று கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் வீடு ஒன்றினை அடித்து உடைத்து, தீயிட்டு எரித்து விட்டு தலைமறைவாகி இருந்துள்ளார்.
இதனை தொடர்ந்து, அவரை கைது செய்வதற்கு கிளிநொச்சி பொலிஸார் நடவடிக்கைகள் முன்னெடுத்து வந்தனர்.
இந்நிலையில், அவர் யாழ்ப்பாணம் - 5ஆம் குறுக்குத்தெரு பகுதியில் தலைமறைவாகி இருந்த நிலையில் யாழ்ப்பாணம் மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தை நபர், மேலதிக விசாரணைகளுக்காக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டார்.