மின்சார மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்ய அனுமதி - விசேட வர்த்தமானி வெளியீடு
மின்சார மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சைக்கிள்களை உரிமத்தின் கீழ் இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கும் வர்த்தமானி அறிவித்தலை நிதி அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சர் என்ற வகையில் நேற்று (23) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.
இதன்படி, மின்சார மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்வதற்காக 4000 ரூபாவும் அதன் உரிமக் கட்டணமாக 1000 ரூபாவும் அறவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
நிபந்தனைகளுடன் வழங்கப்பட்டுள்ள அனுமதி
இதேவேளை, நிர்மாணத் தொழிலுக்குத் தேவையான வாகனங்கள், கிரானைட் உள்ளிட்ட பல கட்டுமானப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான சந்தர்ப்பம் நேற்று முதல் நிபந்தனைகளுடன் வழங்கப்பட்டுள்ளது.
அத்தகைய இறக்குமதிகள் அங்கிகரிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்கள், கலப்பு அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் முதலீட்டு சபை கீழ் வராத அரசாங்க திட்டங்களுக்கு செய்யப்படலாம்.
இந்த இறக்குமதிகளை செய்யும் போது திட்ட அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளவாறு வாகன மற்றும் மூலப் பொருட்களை 180 நாட்களுக்கான வங்கி கடன் கடிதங்களின் கீழ் இறக்குமதி செய்ய இறக்குமதி கட்டுப்பாட்டாளர், நிதியமைச்சின் செயலாளர் மற்றும் நிதியமைச்சரின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது நிபந்தனைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளது.





பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
