சிறைவாசம் அனுபவிக்கும் பௌத்த பிக்குகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி
பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் இலங்கையின் சிறைச்சாலைகளில் சிறைவாசம் அனுபவிக்கும் பௌத்த பிக்குமார் வெளியில் அழைத்து வரப்படும் போது காவியுடை அணிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் திணைக்களத்தின் நிரந்தரக் கட்டளைகள் மற்றும் விதிகள் அதற்கெனத் திருத்தப்பட்டு, அது தொடர்பான சுற்றுநிருபம் ஒன்று சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
காவியுடை அணிய அனுமதி
கடந்த 16ம் திகதி வெளியிடப்பட்ட குறித்த சுற்றுநிருபத்தின் பிரகாரம் இனிவரும் காலங்களில் சிறைவாசம் அனுபவிக்கும் பௌத்த பிக்குமார் வழக்கு அல்லது மருத்துவத் தேவைகள் உள்ளிட்ட காரணங்களுக்காக சிறைச்சாலைக்கு வெளியில் அழைத்து வரப்படும்போது அவர்களுக்கு காவியுடை அணிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும் மகாநாயக்க தேரர்கள் யாரேனும் ஒரு பௌத்த பிக்கு தொடர்பில் காவியுடை அணிய அனுமதிக்க வேண்டாம் என்று சிபாரிசு செய்யும் பட்சத்தில் அவ்வாறான பிக்குமாருக்கு வழக்கம் போன்று சாதாரண வெள்ளை ஆடை மட்டும் அணிவித்து வெளியில் அழைத்துச் செல்லுமாறும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தனது சுற்றுநிருபத்தில் குறிப்பிட்டுள்ளார்.