ராஜபக்சவினரின் இனவாத ஆயுதம்! மண்ணைத் தொட்டு வணங்கும் ஓர் அரசியல் நாடகம்..
ராஜபக்ச அணியினர், இலங்கையில் தங்களுடைய அரசியல் நலன்களை அடைவதற்காக இனவாதத்தையும் மதவாதத்தையும் மிகத் தீவிரமாகப் பயன்படுத்திய ஒரு அரசியல் குழுவாகும் என மாற்றத்திற்கான இளைஞர் அமைப்பின் தேசிய அமைப்பாளர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இனவாத அரசியல்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இலங்கை அரசியலில் இனவாதத்தைத் தங்களுடைய அரசியல் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காகப் பயன்படுத்தும் போக்கு நீண்ட காலமாகவே இருந்து வருகின்றது.

குறிப்பாக, ராஜபக்ச அரசியல் அணியினர் தங்களுடைய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக இனவாதத்தையும் மதவாதத்தையும் பாரிய அளவில் பயன்படுத்தியுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் போன்ற சம்பவங்களையும் நாம் அறிவோம். இந்தத் தாக்குதலுக்காகப் பணத்தைச் செலவிட்டது யார் என்பது தொடர்பாக எங்களிடம் உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை.
இலங்கையின் அரசியல் குடும்பங்களும், அரசியல்வாதிகளும், தங்கள் இனத்தின் மீதும் மதத்தின்மீதும் மிகுந்த பற்றுக்கொண்டவர்கள் என்று காட்டிக் கொண்டு இனவாதத்தையும மதவாதத்தையும் பயன்படுத்தி வந்துள்ளனர்.
தாங்கள் நாட்டின்மீதும் இனத்தின் மீதும் மதத்தின் மீதும் அன்பு கொண்டவர்கள் என்பதை வெளிப்படுத்துவதற்காக மண்ணைத் தொட்டு வணங்குவது போன்ற செயல்களையும் செய்து பல ஆண்டுகளாக இந்த அரசியலை முன்னெடுத்து வந்துள்ளனர்.
இந்த அரசியல் போக்கின் நிழல்கள் இன்றும் இலங்கையில் தொடர்ந்து காணப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri