லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
கடந்த சில நாட்களாக நிலவி வரும் எரிவாயு பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, இன்று சிறப்பு எரிவாயு விநியோகப் பணிகளை மேற்கொள்ளவிருப்பதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது சந்தையில் நிலவும் லிட்ரோ எரிவாயு பற்றாக்குறை அடுத்த செவ்வாய்க்கிழமைக்குள் முழுமையாக தீர்க்கப்படும் என்று நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.
கடந்த 2 நாட்களாக எரிவாயு விநியோகம் இல்லாததே இந்த பற்றாக்குறைக்கு காரணம் என்று கூறியுள்ளார்.
இன்று நாட்டிற்கு வரவுள்ள கப்பல்
நேற்று, 12.5 கிலோகிராம் எடையுள்ள 100,000 உள்நாட்டு எரிவாயு உருளைகள் சந்தைக்கு வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் இன்று 85,000 எரிவாயு உருளைகள் விநியோகிக்கப்பட உள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, 3,900 மெட்ரிக் டொன் எரிவாயுவை ஏற்றி வரும் மற்றொரு கப்பல் இன்று (18) நாட்டிற்கு வரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த எரிவாயு இருப்புகளை கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் எரிவாயு பற்றாக்குறை ஏற்படாது என்றும் கூறியுள்ளார்.
காவி உடையை காப்பாற்ற போராடிய ஞானசார தேரர்...! இறுதியில் மின் விசிறியில் தொங்கிய ஆடை - மீண்டும் எழுந்துள்ள சர்ச்சை