இலங்கை அதிகாரிகளை பாராட்டும் சீன பொலிஸார்
இலங்கை பொலிஸ் அதிகாரிகளின் நடவடிக்கைகளை சீன பொலிஸார் பாராட்டியுள்ளனர்.
சீன பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் இலங்கையில் நடமாடுவதாகக் கிடைத்தத் தகவலுக்கு அமைய, இலங்கை பொலிஸார் முன்னெடுத்து வரும் விசாரணைகள் குறித்து சீன பொலிஸார் தமது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, சீன பொலிஸ் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று விரைவில் இலங்கை வரவுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் இலங்கைக்கு அறிவித்துள்ளனர்.

தற்போது பொலிஸ் காவலில் உள்ள சீன பாதாள உலகக் குழு உறுப்பினர்களிடம் சீன பொலிஸார் விரைவில் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.
கொழும்பு துறைமுக நகரில் சீன பிரஜை ஒருவரைக் கடத்திச் சென்று கொலை செய்த சீன பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த நால்வரை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் அண்மையில் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan