நாட்டின் பல பகுதிகளுக்கு ஆம்பர் எச்சரிக்கை விடுவிப்பு
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் பதுளை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று (17.10.2026) மாலை 07.00 மணிமுதல் நாளை (18) காலை 06.00 மணி வரை இந்த 'மஞ்சள்' எச்சரிக்கை நடைமுறையில் இருக்கும்.
பலத்த காற்று
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களிலிருந்து பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதேவேளை,இன்றையதினம் நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டமைக்கு கொத்மலை மின் நிலையத்தின் மீது மின்னல் தாக்கியமையே காரணம் என எரிசக்தி பிரதி அமைச்சர் அக்ரம் இலியாஸ் தெரிவித்துள்ளார்.
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan