இலங்கை முழுவதும் ஏற்பட்ட மின் தடைக்கான காரணத்தை வெளியிட்ட அரசாங்கம்
நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டமைக்கு கொத்மலை மின் நிலையத்தின் மீது மின்னல் தாக்கியமையே காரணம் என எரிசக்தி பிரதி அமைச்சர் அக்ரம் இலியாஸ் தெரிவித்துள்ளார்.
மேல் கொத்மலை மின் நிலையத்தில் உள்ள இரண்டு முக்கிய மின் உற்பத்தி அலகுகளில் ஒன்றின் மீது மின்னல் தாக்கியமையால், ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, தேசிய மின் கட்டமைப்பில் பாதிப்பு ஏற்பட்டதாக பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.
தேசிய மின் கட்டமைப்பில் பாதிப்பு மற்றும் மின் சமநிலை ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டமையால் நாடு முழுவதும் மின்சார விநியோகம் முற்றிலுமாகத் தடைபட்டதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மின்சார விநியோகக் கட்டமைப்பு
இதேவேளை செயலிழந்திருந்த தேசிய மின்சார விநியோகக் கட்டமைப்பு தற்போது முழுமையாக இயல்பு நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மின்சார சபை மற்றும் கட்டமைப்பு இயக்கப் பொறியியலாளர்களின் தீவிர முயற்சியை தொடர்ந்து, பிரதான அதியுயர் அழுத்த மின் விநியோக வலைப்பமைப்பு தற்போது முழுமையாக செயற்படுத்தப்பட்டுள்ளது.
பிராந்திய மட்டத்தில் உபமின் நிலையங்கள் ஊடாக வீட்டு மற்றும் வணிக நுகர்வோருக்கு மின் விநியோகத்தை விரைவில் இயல்பு நிலைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam