முக்கிய பதவியிலிருந்து விலகிய மஹேல
ஐபிஎல் ரி20 போட்டித் தொடரின் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து இலங்கையின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜயவர்தன விலகியுள்ளதாக அந்த அணி அறிவித்துள்ளது.
49 வயதான ஜெயவர்தன, கடந்த 2017 முதல் 2022 வரையிலான தனது முதல் கட்டப் பயிற்றுவிப்புக் காலத்தில், மும்பை அணிக்கு 3 ஐபிஎல் பட்டங்களை வென்று கொடுத்துள்ளார்.
எனினும், 2024 ஆம் ஆண்டு மீண்டும் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற பின்னர், அவரால் அந்த முந்தைய வெற்றிகளைத் தொடர்ந்து தக்கவைக்க முடியவில்லை.

அவரது வழிகாட்டலில் 2025 ஆம் ஆண்டு நான்காவது இடத்தைப் பிடித்த மும்பை அணி, பிளே-ஆப் சுற்றில் தோல்வியடைந்ததுடன், 2026 ஆம் ஆண்டு லீக் சுற்றில் இரண்டாவது கடைசி இடத்தைப் பிடித்து தொடரை நிறைவு செய்தது.
தமது விலகல் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஜெயவர்தன, "நாங்கள் கூட்டாக சில மறக்க முடியாத தருங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளோம், சவால்களை எதிர்கொண்டுள்ளோம், மேலும் நாம் அனைவரும் பெருமைப்படக்கூடிய ஒன்றை உருவாக்கியுள்ளோம்," எனத் தெரிவித்துள்ளார்.
நாங்கள் கூட்டாக சாதித்தவை குறித்து பெருமிதம் கொண்டுள்ளேன். என் இதயத்தில் எப்போதும் மும்பை இந்தியன்ஸ் அணிக்குத் தனி இடமுண்டு. வரவிருக்கும் ஆண்டுகளில் அணிக்கு அனைத்து வெற்றிகளும் கிடைக்க வாழ்த்துகிறேன் என ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam