நாட்டில் களமிறக்கப்பட்டுள்ள புலனாய்வாளர்கள்! காவியுடை சர்ச்சையில் சிக்கப் போகும் நபர்கள்
நாட்டை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்களைக் கண்டறிய நாடளாவிய ரீதியில் புலனாய்வுப் பிரிவினர் களமிறக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பௌத்த பிக்குகளின் காவியுடை தொடர்பான சம்பவத்தை ஒரு சாக்காகப் பயன்படுத்தி, நாச வேலைகளில் ஈடுபடுபவர்கள் அல்லது நாட்டை சீர்குலைக்க முயற்சிப்பவர்கள் மீது சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.
ஜனாதிபதியின் நிலைப்பாடு
இத்தகைய நபர்களைக் கண்டறிய புலனாய்வுப் பிரவினர் களமிறக்கப்பட்டுள்ளனர். எந்தவொரு சூழ்நிலையிலும் நாட்டை சீர்குலைக்கும் செயல்களுக்கு இடமளிக்கப்பட மாட்டாது. அமைதியான பேரணிகள் மற்றும் போராட்டங்களுக்கு அரசாங்கம் எந்தத் தடையும் விதிக்கவில்லை.

பௌத்த பிக்குகளின் காவியுடை தொடர்பான விவகாரத்தைக் கையாள்வதற்காக ஜனாதிபதி ஒரு சிறப்புக் குழுவை நியமித்து தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்.
இருப்பினும் நீதிமன்றத் தீர்ப்புக்களுக்கு முரணான வகையில் ஜனாதிபதி செயல்படமாட்டார். சட்ட வரம்பிற்கு அப்பாற்பட்டு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்புக்கள் நீதிமன்றங்களினாலேயே இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
எனவே, சட்டத்தின் ஆட்சியை மீறும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என குறிப்பிட்டுள்ளார்.
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam