இலங்கை முழுவதும் மக்கள் தவிப்பு : கட்டுநாயக்க விமான நிலைய சேவைகளுக்கு கடும் பாதிப்பு
இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று நண்பகல் 11.45 மணி முதல் மலை 6.30 மணி வரை மின்சார விநியோகம் திடீரென தடைப்பட்டமையால் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளன.
கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, காலி, கண்டி, எல்ல, பொலன்னறுவை, நுவரெலியா, மட்டக்களப்பு, திருகோணமலை உட்பட நாட்டின் பல பகுதிகளில் மின்சார தடை ஏற்பட்டிருந்தது.
கடுமையான வெப்ப நிலை காரணமாக, குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் நோயாளர்கள் பெரும் அவதிக்கு முகங்கொடுத்துள்ளனர்.
மின் விநியோகம்
இந்த நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்திலும் மின் விநியோகம் தடைப்பட்டமையினால், அதன் சேவைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் தீர்வை வரியற்ற கடைகள் மின்சார தடையால் முடங்கியதாக விமான நிலையத்தில் இருந்த பயணிகள் தெரிவித்துள்ளனர்.
சூரிய ஆற்றல் மூலம் இயங்கும் ஓரிரு விளக்குகள் மாத்திரமே இயங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே நாடு தழுவிய ரீதியில் இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri