இஸ்ரேலில் பிரதமருக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்
இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக பெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த போராட்டத்தில் நேற்று முன்தினம் (30.03.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது டெல்அவில், ஜெருச லேம், சிசேரியா ரானானா, ஹெர்ஸ்லியா ஆகிய நகரங்களில் வீதிகளில் இறங்கிய போராட்டக்காரர்கள் காசாவில் உள்ள அனைத்து பிணைக் கைதிகளை மீட்டு கொண்டு வர கோரியும், பிரதமர் நெதன்யாகு பதவி விலகுமாறும், பொதுத் தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இஸ்ரேலில் பரபரப்பு
மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியாக சென்று அலுவலகங்களை முற்றுகையிட முயன்ற போது அவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் ஜெருசலேமில், பிரதமர் நெதன்யாகு வீட்டிற்கு முன்பு ஏராளமானோர் திரண்டு போராட்டம் நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விதிகளில் பொருட்களை போட்டு தீ வைத்து போராட்டக்காரர்கள் கொளுத்தியமையினால் இஸ்ரேலில் நேற்று இரவு பரபரப்பு நிலவியதாக கூறப்படுகிறது.
டெல்அவிலில் இன்று அதிகாலை(31) போராட்டம் முடிவுக்கு வந்ததாகவும், 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |