கொழும்பில் பிரதி பொலிஸ்மா அதிபர் கைது! நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
புதிய இணைப்பு
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டகொழும்பு பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் உதித லியனகேவை செப்டம்பர் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.
முதல் இணைப்பு
கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் உதித்த லியனகே குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (25) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபர் கைது
புதையல் தோண்டுவதற்கு முற்பட்ட குற்றச்சாட்டில் குறித்த பொலிஸ் மா அதிபரின் மனைவி உட்பட 8 பேரை அநுராதபுரம் பொலிஸார் முன்னதாக கைது செய்திருந்தனர்.

இதனை அடுத்து தாம் பிரதி பொலிஸ் மா அதிபர் என்றும், தமது மனைவியை உடனடியாக விடுவிக்குமாறும் அநுராதபுரம் பொலிஸாருக்கு சந்தேநபர் தொலைபேசியில் அழுத்தம் கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், இன்றைய தினம் சந்தேகநபரை கைது செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam