ரணில் தொடர்பில் விசேட அறிக்கை! சஜித் தரப்பின் முக்கிய அறிவிப்பு
கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை குறித்து சிறப்பு மருத்துவ அறிக்கை வெளியாகவுள்ள பின்னணியில் எதிர்கட்சி தரப்பு பொதுமக்களிடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
நாளை ரணில் நீதிமன்றில் முன்னிலையாவாரா இல்லையா என்ற கேள்விகளுக்கு மத்தியில் இன்று எதிர் தரப்புக்கள் கொழும்பில் விசேட சந்திப்பை நடத்தியிருந்தன.
இதன்போது நாளை ஜனநாயகத்தை விரும்பும் அனைத்து மக்கள் ஒன்றிணைய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கேரிக்கை விடுத்துள்ளன.
ஆயுத பலத்தில் ஆட்சி
எதிர்க்கட்சியை பயமுறுத்தி, முடக்கி, தனிகட்சி ஆட்சியை அமைக்க முயற்சிக்கிறது எனவும், இந்த அரசாங்கம் அன்று ஆயுத பலத்தில் ஆட்சியை பிடிக்க முயற்சித்தது எனவும் எதிர்க்கட்சியின் பொதுச் செயலாளர் ரன்ஜித் மத்தும் பண்டார குற்றம் சுமத்தியுள்ளார்.
அதை ஜனநாயக சர்வாதிகாரத்தில் செயற்பட முனைவதை தடுக்க ஜயநாயகத்தை விரும்பும் மக்கள் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாளை ரணில் நீதிமன்றில் முன்னிலையாவார் என்றும் அவருக்கு ஆதரவாக ஒன்றினைய தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தேசிய மருத்துவமனையின் பதில் பணிப்பாளர் மருத்துவர் பிரதீப் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலையை கண்காணிக்கும் மருத்துவ நிபுணர் குழு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை குறித்த சிறப்பு மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்க தயாராகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
நீதிமன்றத்தில் முன்னிலை
மருத்துவ அறிக்கையைத் தொடர்ந்து, முன்னாள் ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் முன்னிலையாகுவதற்கு தகுதியானவரா என்பது குறித்து நாளை (26) முடிவு எடுக்கப்படும் என்றும் தேசிய மருத்துவமனையின் பதில் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நலம் குறித்து விசாரிக்க எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட தரப்பினர் வைத்தியசாலைக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



