உலகின் பாதுகாப்பான நாடுகள் -2025 : இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்
பொருளாதாரம் மற்றும் அமைதி நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய உலக அமைதி குறியீட்டின்படி, உலகின் மிக அமைதியான நாடாக 2025 ஆம் ஆண்டிலும் ஐஸ்லாந்து தொடர்கின்றது.
2008 முதல் தொடர்ந்து அந்த இடத்தை தக்க வைத்துள்ளது.
இலங்கையின் இடம்
அடுத்த இடங்களில் அயர்லாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன.

இந்த நாடுகள் சமூக பாதுகாப்பு, குறைந்த இராணுவமயமாக்கல் மற்றும் மோதல்கள் இல்லாத சூழ்நிலை காரணமாக அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளதாக அறிக்கை கூறுகின்றது.
இலங்கை 163 நாடுகளில் 97வது இடத்தில் உள்ளது.
கடந்த ஆண்டை விட இரண்டு இடங்கள் இலங்கை முன்னேறியுள்ளது. தெற்காசியாவில் பூட்டான், நேபாளத்திற்குப் பிறகு மூன்றாவது அமைதியான நாடாக இலங்கை தரவரிசையில் உள்ளது.
அத்துடன், உலக அமைதி கடந்த 17 ஆண்டுகளில் 13வது முறையாக குறைந்துள்ளதாகவும், தொடர்ச்சியாக ஆறாவது ஆண்டாக உலகம் மேலும் அமைதியற்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri