கண்டியில் யுக்திய சுற்றிவளைப்பில் ஆயுதங்களுடன் 3 சந்தேகநபர்கள் கைது
கண்டி - கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புப்புரஸ்ஸ பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த மூவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது, கம்பளை விஷேட அதிரடிப்படை அதிகாரிகளால் நேற்று இரவு (30.03.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கண்டி - கலஹா பகுதியில் திடீரென மேற்கொள்ளப்பட்ட யுக்திய சுற்றிவளைப்பு கீழ் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இதன்போது, அனுமதி பத்திரம் இல்லாமல் வைத்திருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ரவைகள் முச்சக்கரவண்டி ஆகியவற்றை இதன்போது விசேட அதிரடி படையினர் கைப்பற்றியுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் கலஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri