யாழில் கிணற்றில் இருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு
யாழ். சுன்னாகம்(Jaffna - Chunnakam) பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தோட்டக் கிணறு ஒன்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் இன்று(31.03.2024) மீட்கப்பட்டுள்ளது.
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியைச்சேர்ந்த சின்னத்துரை தவராசா (வயது 63) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மரண விசாரணை
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த குடும்பஸ்தரை காணவில்லை என உறவினர்கள் தேடுதல் செய்து வந்த நிலையில் அவர் இவ்வாறு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரது சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.
மேலும், உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





பாரிய முதலீடுகளால் இன்னொரு ஏழை நாட்டிற்கு வலை விரித்த சீனா... முதற்கட்டமாக ரூ 3,000 கோடி News Lankasri

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri
