கொழும்பு துறைமுகத்தில் சிங்கப்பூர் புலனாய்வாளர்கள் விசாரணை: முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு
பேரழிவிற்கு வழிவகுத்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் பணியாளர்கள் மற்றும் கொழும்பு(Coombo) துறைமுகத்தின் பல்வேறு குறைபாடுகளை சிங்கப்பூரின்(Singapore) போக்குவரத்து பாதுகாப்பு புலனாய்வுப் பணியகம் கண்டறிந்துள்ளது.
முன்னதாக கொள்கலனில் இருந்து கசிவானது, கட்டாரில் உள்ள ஹமாத் துறைமுகத்தில் முதன்முதலில் கண்டறியப்பட்டபோதும், பணியாளர்கள் இது தொடர்பிலான விபரங்களை சரிபார்க்கவில்லை எனவும், கசிவைக் கட்டுப்படுத்த மரத்தூளை பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இது தொடர்பில் தெரியவருகையில்,
கப்பல் தலைவரின் கோரிக்கை
கொள்கலனில் இருந்து நைட்ரிக் அமிலம் கசிந்ததைக் கண்டறிந்தபோது, கசிவுக்கான காரணத்தைக் கண்டறிய விரிவான ஆய்வு முன்கூட்டியே மேற்கொள்ளப்படவில்லை.
மேலும், கொள்கலனை இறக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், பணியாளர்கள் இதனை விரைவாக செய்யப்படுவதை உறுதி செய்வதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ளப்படவில்லை.
இதன்படி கொள்கலனை இறக்குவதற்கான கப்பல் தலைவரின் கோரிக்கையை துறைமுகங்கள் ஆதரிக்கவில்லை.
இதற்கு போதுமான தகவல் அல்லது நைட்ரிக் அமிலம் கசியும் கொள்கலனைக் கையாளும் திறன் போதுமானதாக இல்லை என்று துறைமுகங்கள் கூறிவிட்டன.
அவசர கோரிக்கை
இதன்படி நிறுவனத்திற்கும் துறைமுகங்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு சிறப்பாக இருந்திருக்கலாம் என்று சிங்கப்பூர் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
அவசரநிலையின் ஆரம்ப கட்டத்தில், சரக்குகள் இருப்பில் உள்ள சூழ்நிலையைப் பற்றிய துல்லியமான தகவலைச் சேகரிக்கவும், முன்னிலையில் தீயை எதிர்த்துப் போராடவும், பணியாளர்கள் யாரும் சுயமான சுவாசக் கருவி மற்றும் தீயணைப்பு வீரர்களின் ஆடைகளை அணியவில்லை.
இந்நிலையில், கப்பலுக்கு உதவ கொழும்பு துறைமுகக் கட்டுப்பாட்டின் பதில் மட்டுப்படுத்தப்பட்டதாகக் கருதப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் குழு கப்பலில் உள்ள நிலைமையை மதிப்பிட்ட பிறகு பின்தொடர்தல் எதனையும் மேற்கொள்ளவில்லை.” என சிங்கப்பூர் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
தீயை அணைக்கும் விடயத்தில் தொடர்ச்சியான ஆதரவு வழங்கப்படவில்லை.
அத்துடன் தீக் கட்டுப்பாட்டை மீறுவதற்கு முன்னர் அவசரமாக நிறுத்தப்படுவதற்கு பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டபோது, கொழும்பு துறைமுக கட்டுப்பாட்டில் இருந்து கப்பல் தலைவருக்கு பதில் கிடைக்கவில்லை என்றும் சிங்கப்பூரின் போக்குவரத்து பாதுகாப்பு விசாரணை பணியகம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |