நல்லூரில் வானளாவிய அளவில் சேமிக்கப்பட்டுவரும் குப்பைகள்
நல்லூர் - காரைக்கால் இந்து மயானத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ள நல்லூர் பிரதேச சபையின் குப்பை சேமிப்பு (சேதனப் பசளையாக்கும்) மையத்தில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வானளாவிய அளவில் சேமிக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.
தனது முகநூல் தளத்தில் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், குறித்த செயற்பாட்டால் சுற்றுவட்டார மக்கள் கடும் அதிருப்தியுடனும், சுகாதார அச்சத்துடனும் வாழ்ந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
துர்நாற்றம், புகை
“இக்குப்பைகள் அவ்வப்போது எரியூட்டப்படுவதால், துர்நாற்றம், புகை மற்றும் சுகாதாரக்கேடுகள் ஏற்படுகின்றன.
இது தொடர்பாக பலமுறை பொதுமக்கள் முறையிட்டிருந்தாலும், பிரதேச சபையினர் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
அண்மையில் யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபரை நேரில் அழைத்து வந்து, இப்பிரச்சனைக்கான நிலைமையை காட்டியிருந்தேன்.
அவர் வழங்கிய உறுதிமொழிகளுக்குப் பிறகும், இன்றும் மீண்டும் அதே இடத்தில் குப்பைகள் எரியூட்டப்பட்டமை மக்கள் கோபத்தையும் வருத்தத்தையும் அதிகரித்திருக்கிறது.
பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் உடனடி தீர்வு வேண்டி கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
பொது சுகாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதற்கான நிரந்தர தீர்வு விரைவில் எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது” என ரஜீவன் முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri

இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam
