13ஆவது திருத்தம் குறித்த ஈ.பிடி.பியின் நிலைப்பாடு தொடர்பில் ஆராய்ந்த பெப்ரல் அமைப்பு

13th amendment Jaffna Government Of Sri Lanka
By Kajinthan Nov 03, 2024 03:35 PM GMT
Report

13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்தும், அதனை நிறைவேற்றுவதில் உள்ள இடர்பாடுகள் குறித்தும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியுடன் நிறுவனம் பெப்ரல் அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துரையாடலொன்றை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த கலந்துரையாடல் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்ப்பாணத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்றையதினம் நடைபெற்றுள்ளது.

தென் பகுதியில் செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் அரச சார்பற்ற நிறுவனமான பெப்ரல், குறித்த விடயம் தொடர்பில் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருகின்றது.

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்

அரசியல் அபிலாசைகள் 

இதன் ஒரு பகுதியாக இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில், கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் சிரேஸ்ட ஆலோசகரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க் கட்சி தலைவருமான சி.தவராசா கருத்து தெரிவித்துள்ளார். 

13ஆவது திருத்தம் குறித்த ஈ.பிடி.பியின் நிலைப்பாடு தொடர்பில் ஆராய்ந்த பெப்ரல் அமைப்பு | Pefral Reserches About Eptp S 13Th Amendment

அவர் கூறுகையில், "எமது கட்சியின் நிலைப்பாடு, 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைபடுத்துவதில் ஆரம்பித்து முன்னோக்கி நகர்வதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதை இலக்காக கொண்டது.

அதனடிப்படையில் 13ஆம் திருத்தத்தினை மூன்று கட்டங்களாக நடைமுறைபடுத்துவதன் ஊடாக முழுமையாக அதனை நடைமுறைப்படுத்த முடியும் என்று நம்புகின்றோம்.

புலம்பெயர் ஈழத்தமிழரை இலக்குவைத்து புலனாய்வாளர்களின் நகர்வு

புலம்பெயர் ஈழத்தமிழரை இலக்குவைத்து புலனாய்வாளர்களின் நகர்வு

சட்ட ஏற்பாடுகள்

முதலாவதாக, நிறைவேற்று செயற்பாடுகள் ஊடாகவும் நிர்வாக செயற்பாடுகள் ஊடாகவும் மாகாணங்களில் இருந்து எடுக்கப்பட்ட விடயங்களை மீளக் கையளிப்பது. இதனை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியினால் நடைமுறைப்படுத்த முடியும்.

13ஆவது திருத்தம் குறித்த ஈ.பிடி.பியின் நிலைப்பாடு தொடர்பில் ஆராய்ந்த பெப்ரல் அமைப்பு | Pefral Reserches About Eptp S 13Th Amendment

இரண்டாவது, 13ஆவது திருத்தச் சட்டம் உருவாக்கப்பட முன்னர் நடைமுறையில் இருந்த சில சட்ட ஏற்பாடுகளுக்கும் 13ஆம் திருத்தச்சட்டத்தில் சொல்லப்பட்ட சில விடயங்களுக்கும் இடையில் காணப்படும் முரண்பாடுகளில் கணிசமானவற்றை நாடாளுமன்றில் சாதாரண பெரும்பான்மை ஊடாக திருத்திக் கொள்ள முடியும்.

மூன்றாவது கட்டமாக, அரசியலமைப்பில் அடிப்படையில் ஏதாவது மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பில் சிந்திப்பது இதை எமது கட்சி அன்றிலிருந்து இன்றுவரை எந்தவித மாற்றமோ வழுவழுப்புக்களோ இல்லாது பல தடைகள் வந்தபோதும் எடுத்துக் கூறியிருக்கின்றது.

அதேபோன்று இந்த நிலைப்பாட்டை பலவிதமான சந்திப்புகள் ஆணைக்குழுக்கள் முன்னிலையிலும் கூறி உள்ளோம் ” என சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டை மீறி உள்ளது

அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டை மீறி உள்ளது

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US