அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டை மீறி உள்ளது
தற்போதைய அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டை மீறி செயல்பட்டுள்ளது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தின் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர(Kanchana Wijesekara) இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
எரிவாயு விலை
எரிவாயு விலை சூத்திரத்திற்கு அமைவாக விலை மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
இதன்படி உலக சந்தையில் அதிகரித்துள்ள எரிவாயு விலையின் தொகைக்கு நிகரான அடிப்படையில் இலங்கையில் எரிவாயு விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
இதனால் லாப்ஸ் எரிவாயு நிறுவனம் தனது விநியோகத்தை வரையறுத்துக் கொண்டுள்ளதாகவும் இதனால் எதிர்காலத்தில் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
லிற்றோ எரிவாயு நிறுவனமும் தற்போது சர்வதேச நாணய நிதியத்திடம் அளிக்கப்பட்ட உறுதி மொழிகளை மீறி எரிவாயு விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலைமைகளினால் சர்வதேச நாணய நிதியத்துடனான மூன்றாம் மீளாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கம் நவம்பர் மாதம் மூன்றாவது கடன் தொகையை பெற்றுக் கொள்வதற்கு திட்டமிட்டு இருந்தபோதிலும் தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால், கடன் பெற்றுக் கொள்வதற்கு காலம் தாழ்த்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.





கனடாவில் வாழ்வாதாரத்திற்காக டாக்சி ஓட்டும் இராணுவ வைத்தியர் - இந்திய பெண் பகிர்ந்த அனுபவம் News Lankasri

15 வயதில் வீட்டின் அறையில் அடைத்த பெற்றோர்! 27 ஆண்டுகளுக்கு பின் 47 வயதில் பெண் மீட்பு News Lankasri
