புலம்பெயர் தமிழர்களுக்கு அநுர அரசாங்கத்தின் அழைப்பு
புலம்பெயர்ந்து வாழும் இலங்கை தமிழர்கள், நாட்டில் வந்து முதலீடு செய்வதற்கு புதிய அரசாங்கம் அழைப்பு விடுப்பதாக தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலங்கையில் முதலீடு
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டின் பொருளாதாரம், முதலீட்டு துறைகளில் வெளிநாடுகளிலுள்ள இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்தவர்களின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வது தொடர்பில் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றது.
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள டயஸ்போராக்களுக்கு இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு நாம் விசேட அழைப்பை விடுகின்றோம்.
குறிப்பாக அவர்கள் கிராமப்புறங்களில் தமது முதலீடுகளை மேற்கொள்ள முடியும் அதற்கான அனைத்து உதவி ஒத்துழைப்புகளையும் சம்பந்தப்பட்ட அமைச்சும் முதலீட்டு சபையும் வழங்கும் அதில் எவருக்கும் தயக்கம் தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 37 நிமிடங்கள் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri
