உலக சந்தையில் தங்கத்தின் விலையில் பதிவாகும் மாற்றம் - இன்றைய நிலவரம்
சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5171.26 டொலராக இன்றைய தினம் (12.03.2026) பதிவாகியுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் காரணமாக தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
உலகளாவிய ரீதியில் அமெரிக்க டொலரின் மதிப்பு வலுவடைந்துள்ளதாலும், முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நகர்வுகளாலும் தங்கம் விலை குறைவடைந்துள்ளதாக தெரியவருகிறது.

வெள்ளியின் விலை
இதேவேளை வெள்ளியின் விலையிலும் வீழ்ச்சி அவதானிக்கப்பட்டுள்ளதுடன் இன்று ஒரு அவுண்ஸ் வெள்ளி 85.35 டொலராக காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச விலை வீழ்ச்சியடைந்தாலும், டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி மற்றும் இறக்குமதி செலவுகள் காரணமாக, உள்நாட்டு சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று சற்றே அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam