மத்திய கிழக்கு பதற்றம்: ஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஐ.நா பொதுச்செயலாளர் அவசர ஆலோசனை
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் செய்யது அப்பாஸ் அராக்ஷி உடன் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய பதற்றமான சூழல் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்த உரையாடலின் போது, பிராந்தியத்தில் மோதல்கள் மேலும் தீவிரமடைவதைத் தடுக்க வேண்டியதன் அவசியத்தை பொதுச்செயலாளர் வலியுறுத்தினார்.
குறிப்பாக, இப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட அனைத்துத் தரப்பினரும் அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஈரானின் நிலைப்பாடு தொடர்பில் விளக்கம்
மறுபுறம், பிராந்திய பாதுகாப்பு தொடர்பான ஈரானின் நிலைப்பாட்டை வெளியுறவு அமைச்சர் அராக்ஷி இதன்போது விளக்கினார்.

காசா மற்றும் லெபனான் உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் மனிதாபிமான நெருக்கடிகள் குறித்தும், அங்கு உடனடியாகப் போர்நிறுத்தம் செய்யப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.
சர்வதேச சட்டங்களைப் மதிப்பதன் மூலமே இப்பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வை எட்ட முடியும் எனச் சுட்டிக்காட்டிய பொதுச்செயலாளர், மத்திய கிழக்கில் அமைதியை மீட்டெடுக்க ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து தனது முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும் உறுதி அளித்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பெண்ணை பார்த்ததும் மயங்கிய மனோஜிற்கு பெண் வீட்டார் கொடுத்த ஷாக்.. சிறகடிக்க ஆசை சீரியல் புதிய புரொமோ Cineulagam
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri