காசாவில் ஐக்கிய நாடுகள் சபையின் பங்களிப்பை நிராகரித்தது சமாதான சபை
இஸ்ரேலின் நீண்டகாலக் கோரிக்கைக்கு அமைவாக, காசாவில் ஐக்கிய நாடுகள் சபையின் பாலஸ்தீன அகதிகளுக்கான நிவாரண மற்றும் பணி முகவரகத்தின் பங்களிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என அமெரிக்கா தலைமையிலான 'சமாதான சபை' தெரிவித்துள்ளது.
போர்நிறுத்தம் மற்றும் காஸாவின் மறுசீரமைப்புப் பணிகளைக் கண்காணிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள இந்தச் சபை, தங்களால் 'நம்பகமானவர்கள்' எனப் கருதப்படும் மற்றும் காசா மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய கூட்டாளர்களுடன் மட்டுமே இணைந்து செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளது.
டொலர்கள்
அந்தத் தகுதியை பாலஸ்தீன அகதிகளுக்கான நிவாரண மற்றும் பணி முகவரகம் பூர்த்தி செய்யவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் தொடர்ச்சியான கொடூரமான போரினால் பேரழிவைச் சந்தித்துள்ள பாலஸ்தீனப் பிராந்தியமான காஸாவை மறுசீரமைப்பதற்காக, பில்லியன் கணக்கிலான டொலர்கள் மதிப்பிலான திட்டத்தை இந்தச் சபை அறிமுகப்படுத்தியிருந்த நிலையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.